சென்னை அண்ணாசாலையின் ரிச்சி தெருவில் எலக்ட்ரானிக் கடை ஒன்றை நடத்தி வரும் தமிம் அன்சாரி என்ற 30 வயது நபர் ஒருவரது வீட்டில் பெட்டி, பெட்டியாக தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று மாலை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தமிழ் அன்சாரி வீட்டில் தங்கம் இருப்பதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சென்னை சேப்பாக்கம், பெல்ஸ்ரோடு, சி.என்.கே. தெருவில் உள்ள அவரது வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த அதிகாரிகள் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை சோதனை செய்தனர்.
அதிகாரிகள் சோதனை செய்தபோது தமிழ் அன்சாரி மற்றும் அவரது உறவினர்கள் உடன் இருந்தனர். இந்த சோதனையில் தமிழ் அன்சாரி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 33.350 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகள்பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.9.91 கோடி ஆகும்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டது என விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன்பின்னர் விசாரணைக்காக, தமிம் அன்சாரியையும், அவரது உறவினர் ரகுமானையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.