35 வருடங்களுக்கு முன்பே தமிழில் எம்பியாக பதவியேற்ற ஜெயலலிதா!

35 வருடங்களுக்கு முன்பே தமிழில் எம்பியாக பதவியேற்ற ஜெயலலிதா!

திமுக எம்பிக்களும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்களும் தமிழில் பதவியேற்றதை ஒரு பெரிய சாதனை போல் ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்தி வெளியிட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி பதவியேற்றவுடன் தமிழ் வாழ்க, கலைஞர் வாழ்க, பெரியார் வாழ்க, அம்பேத்கர் வாழ்க , தளபதி வாழ்க என்ற கோஷம் வேறு. அது என்ன பாராளுமன்றமா? அல்லது கட்சி கூட்டமா?

ஆனால் கடந்த 1984ஆம் ஆண்டு செல்வி ஜெயலலிதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பதவியேற்கும்போது தமிழில்தான் பதவியேற்றார். இது யாருக்காவது தெரியுமா? 35 வருடங்களுக்கு முன்னரே தமிழில் பதவியேற்ற உதாரணம் இருக்கும் நிலையில் பெரிய சாதனை செய்தது போல் தங்களுக்கு தானே விளம்பரப்படுத்தி கொள்வது நியாயம்தானா? என சிந்தியுங்கள்

மேலும் தமிழ் வாழ்க என்று சொன்னால் மட்டும் தமிழ் வாழ்ந்து விடாது. தமிழுக்காக ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும்

Leave a Reply