தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு கொடியவன் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக 29 இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 1.535 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னாப்ப்ரிக்காவை நாட்டில் உள்ள காவ்டெங் என்ற மாகாணத்தின் டெம்பீஸா என்ற பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் ஆல்பர்ட் மொராக்கே. இவன் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளில் 29 இளம்பெண்களை மிகக்கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். தென்னாப்பிரிக்க போலீஸாரின் தீவிர முயற்சியால் கடந்த 2012-ஆம் கைது செய்யப்பட்ட இந்த குற்றவாளி மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று கூறப்பட்டது.
கொலை முயற்சி, கடத்தல், கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் இருந்ததால் மொராக்கேவுக்கு 1,535 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜோகன்னஸ்பர்க் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாலியல் பலாத்காரத்துக்காக 30 ஆயுள் தண்டனைகளும், கொள்ளைக் குற்றத்துக்காக 360 ஆண்டுகளும், கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக பல நூறு ஆண்டுகளும் அவனுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.