கிரீஸ்: 3500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறையில் தங்கம், வெள்ளி நகைகள்

கிரீஸ்: 3500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறையில் தங்கம், வெள்ளி நகைகள்
3500
சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட கிரீஸ் நாட்டு மன்னரின் கல்லறையில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல நகைகளும், மன்னர்கள் பயன்படுத்திய ஆயுதங்களும் இருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிரீஸ் நாட்டில் உள்ள பைலோஸ் நகரில் உள்ள சின்சினாட்டி பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொல்லியல் நிபுணர்கள் குழு கிரீஸ் நாட்டின் பழமையான மன்னர்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் மன்னர் ஒருவரின் கல்லறையை திறந்து ஆய்வு செய்ய முடிவு செய்தனர். இதன்படி 3500 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட மன்னர் ஒருவரின் கல்லறையை திறந்து பார்த்தபோது அதில் ஒரு ஆணின் எலும்புகூடு இருந்தது. அதன் அருகே 1400 வகையான தங்க நகைகள், ஆயுதங்கள், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலத்தால் ஆன பாத்திரங்கள் புதையல் போன்று குவிந்து கிடந்தன.

அந்த எலும்பு கூட்டின் இடது புறம் ஆயுதங்களும், வலது புறம் நகைகளும் வைக்கப்பட்டிருந்தன. தலை அருகேயும், மார்பிலும் வெண்கலத்தால் ஆன வாள் இருந்தது. அது தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இவை தவிர தங்க முலாம் பூசப்பட்ட குத்து வாள்களும் இருந்தன. வைரங்கள், சிவப்பு கற்கள், மாணிக்க கற்கள் என பல விதமான நவமணிகள் குவிக்கப்பட்டிருந்தன. இது 3500 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இது கிரீஸ் நாட்டை ஆண்டை மன்னர் நெஸ்டரின் கல்லறையோ அல்லது அவரது தந்தையின் கல்லறையோ அல்ல. இவர்களின் காலத்துக்கு 200 அல்லது 300 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த ஒரு போர் வீரரின் கல்லறையாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கல்லறையில் இருந்து மீட்கப்பட்ட நகைகள் ஆயுதங்களை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதை பார்க்க ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர் என கூறப்படுகிறது.

Leave a Reply