ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் நிலை என்ன? சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம்

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் நிலை என்ன? சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம்
sushma
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 39 இந்தியர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களுடைய நிலை என்ன என்று இதுவரை தெரியாமல் இருந்த நிலையி, கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் பத்திரமாக உள்ளதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு அவ்விரு நாடுகளை மட்டுமின்றி உலகையே அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ், கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம்
இராக் நாட்டின் மோசூல் நகரில் பணிபுரியும் 39 இந்தியர்களை கடத்தி சென்றனர். கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களை புதுடெல்லியில் கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் சந்தித்தனர்.

கடந்த மாதம் 17, 18 தேதிகளில் இஸ்ரேல், பாலஸ்தீனம் நாட்டுக்கு பிராயணம் மேற்கொண்ட சுஷ்மாவிடம், அந்நாட்டு அதிகாரிகள், கடத்தப்பட்ட இந்தியர்கள் பத்திரமாக இருப்பதாக உறுதியளித்ததாகவும், விரைவில் அவர்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவித்தார். ஏற்கனவே கடத்தப்பட்ட குடும்பத்தினர்களை அமைச்சர் எட்டு முறை பேசியிருந்த நிலையில் இது அவருடைய ஒன்பதாவது சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply