3D திரையுடன் அறிமுகமாகும் iPhone 6S

download (6)

மக்கள் மத்தியில் பிரபல்யம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசியான iPhone இன் புதிய பதிப்பான iPhone 6 மற்றும் iPhone 6 Plus கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் விரைவில் iPhone 6S மற்றும் iPhone 6S Plus ஆகிய கைப்பேசிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இவ்வாறிருக்கையில் குறித்த கைப்பேசிகள் தொடர்பான பல தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இவற்றின் தொடர்ச்சியாக iPhone 6S கைப்பேசியானது முப்பரிமாண தொடுதிரையினைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது எனும் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இத் தகவலை அப்பிள் நிறுவனம் உத்தியோகபூர்வமான தெரிவிக்கவில்லை.

எவ்வாறெனினும் iPhone 6S ஆனது 2910 x 1080 Pixel Resolution உடைய திரையினையும், iPhone 6S Plus ஆனது 2560 x 1440 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டதாகவும், இரண்டு கைப்பேசிகளும் Apple A9 processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 12 மெகாபிக்சல்களை உடைய கமெராவினைக் கொண்டதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply