4ஜிபி ரேம், 5300 எம்ஏஎச் பேட்டரி கொண்ட எம்.ஐ. மேக்ஸ் 2 இந்தியாவில் வெளியானது
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எம்.ஐ. மேக்ஸ் 2 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் புதிய ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு செயலிகளை இயக்க முடியும்.
இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கும் எம்.ஐ. மேக்ஸ் 2 உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்றும் இதில் MIUI 9 சார்ந்த மென்பொருள் கொண்டு இயங்குகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு இலவச 4ஜி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
சியோமி எம்ஐ. மேக்ஸ் 2 சிறப்பம்சங்கள்
* 6.44 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
* 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் சிப்செட்
* 4 ஜிபி ரேம்
* 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ்,
* ப்ளூடூத் 4.2, 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
* யுஎஸ்பி டைப்-சி போர்ட்
* 5300 எம்ஏஎச் பேட்டரி
* குவிக் சார்ஜ் 3
இந்தியாவில் எம்.ஐ. மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட் பிளாக் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எம்.ஐ. மேக்ஸ் 2 ஜூலை 20-ம் தேதி எம்.ஐ. தளத்திலும், எம்.ஐ. ஹோம் விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் பிளிப்கார்ட், அமேசான், டாடா கிளிக் தளங்களிலும், ஆஃப்லைன் முறையிலும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விற்பனை ஜூலை 27-ம் தேதி காலை 10.00 மணிக்கு துவங்குகிறது.