4 கிலோ தங்கத்தில் உள்ளாடைகள். சீன தங்க வியாபாரியின் புதுமையான முயற்சி
[carousel ids=”70328,70329,70330,70331,70332,70333,70334″]
உலகின் மிக மதிப்புமிக்க உலோகமான தங்கத்தில் பலவிதமான ஆபரணங்கள் மற்றும் கலைப்பொருட்கள் செய்து வரும் நிலையில் சீனாவை சேர்ந்த ஒரு தங்க வியாபாரிக்கு வித்தியாசமான ஒரு எண்ணம் தோன்றியுள்ளது. அவர் தங்கத்தில் பெண்களின் உள்ளாடையை செய்து காட்சிக்கு வைத்துள்ளார். இந்த தங்க உள்ளாடையை பார்க்க தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதாக கூறப்படுகிறது.
வடகிழக்கு சீனாவை சேர்ந்த தங்க வியாபாரி ஒருவர் சுமார் 600,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தில் பெண்கள் அணியும் உள்ளாடை செட் ஒன்றை செய்துள்ளார். இந்த தங்க உள்ளாடைகள் விற்பனைக்கு அல்ல என்றும் வெறும் காட்சிக்கு மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தங்க உள்ளாடைகளை செய்வதற்கு கைதேர்ந்த தங்க ஆபரணங்கள் செய்யும் நிபுணர்கள் தேர்வு செய்யப்பட்டு சுமார் ஆறு மாத காலத்தில் இந்த ஆபரணத்தை செய்துள்ளனர்.
அவருடைய தங்க நகை கடையில் இந்த தங்க உள்ளாடைகள் அணிந்த ஒரு இளம்பெண் காட்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். இதை பார்ப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதாகவும் இதன் காரணமாக அவருடைய கடையில் முன்பை விட வியாபாரம் இருமடங்கு அதிகரித்திருப்பதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.