4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக பட்டியல் வெளியீடு
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
இந்த நிலையில் சற்றுமுன் இந்த நான்கு தொகுதிகளுக்கான அமமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சூலூரில் சுகுமார், அரவக்குறிச்சியில் சாகுல் ஹமீது, திருப்பரங்குன்றத்தில் மகேந்திரன் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தர்ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வருகின்ற மே மாதம் 19ஆம் தேதி அன்று, தமிழகத்தில் நடைபெறவுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல். pic.twitter.com/RWn3n6PwSe
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 22, 2019