4 மருத்துவ கல்லூரியின் முதல்வர்கள் அதிரடி மாற்றம்: என்ன காரணம்?
சேலம், குமரி, திருவாரூர், மதுரை ஆகிய இடங்களிலுள்ள மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவக் கல்லூரி இயக்குநரக இயக்குநர் ஆர். நாராயண் பாபு வெளியிட்ட அறிவிப்பில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் திருமால்பாபு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி டீனாகவும், அவருக்கு பதிலாக, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி நாதன், சேலம் மருத்துவக் கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் கே. விஜயகுமார், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி டீனாகவும், மதுரை மருத்துவக் கல்லூரி டீன் கே. வனிதா, திருச்சி அரசு விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி டீனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், 13 பேருக்கு டீனாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.