4 வருடங்களுக்கு பின் பிரபுதேவாவின் புதிய முயற்சி
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருந்த பிரபுதேவா, தொடர்ச்சியாக இரண்டு படங்களின் தோல்வி காரணமாக மீண்டும் கோலிவுட் பக்கம் நடிகரானார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு இந்தி படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘டபாங் 3’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று இந்தூரில் தொடங்கியது
இந்த படத்தை இயக்கி முடிக்கும் வரை பிரபுதேவா, கோலிவுட் பக்கம் வரமாட்டார் என்றே கூறப்படுகிறது. இந்த படத்தை சல்மான்கான் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார்.