எதிர்க்கட்சிகளின் தொடர் புகார் எதிரொலி. 4 கலெக்டர்கள் 5 எஸ்.பி.க்கள் திடீர் மாற்றம்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தில் திவீரமாக ஈடுபட்டு வருகின்றன. அதே நேரத்தில் தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சிகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றது. குறிப்பாக ஆளும் கட்சிக்கு ஆதரவான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் புகார் எதிரொலியாக அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் 4 மாவட்ட ஆட்சி தலைவர்களையும் 5 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றியுள்ளது. மாற்றப்பட்ட அதிகாரிகள் குறித்த விபரங்களை தற்போது பார்ப்போம்.
மாற்றப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்கள்
1. வேலூர் மாவட்ட கலெக்டராக இருந்த நந்தகோபால் மாற்றப்பட்டு ராஜேந்திர ரத்னு நியமிக்கப்பட்டுள்ளார்.
2. தேனி மாவட்ட கலெக்டராக இருந்த என்.வெங்கடாச்சலம் மாற்றப்பட்டு எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
3. சேலம் மாவட்ட கலெக்டராக இருந்த வி.சம்பத் மாற்றப்பட்டு கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
4. திண்டுக்கல் கலெக்டராக இருந்த டி.என்.ஹரிஹரன் மாற்றப்பட்டு சத்தியபிரதா சாஹூ நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்றப்பட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள்
1. சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சுப்புலட்சுமி மாற்றப்பட்டு அமித் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
2. திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த உமா மாற்றப்பட்டு நிஷா பாார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
3. புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ராஜேஸ்வரி மாற்றப்பட்டு சந்தாேஷ் ஹதிமானி நியமிக்கப்பட்டுள்ளார்.
4. தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த லோகநாதன் மாற்றப்பட்டு பண்டி கங்காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
5. நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த எஸ்.பி.மகேஸ்வரன் மாற்றப்பட்டு சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
6. இதேபோல், சென்னை ஆவடி, திருச்செங்கோடு, வாணியம்பாடி, அருப்புக்கோட்டை, ஒட்டன்சத்திரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.