இந்தியா உள்பட 4 நாடுகள் மறுப்பு எதிரொலி: சார்க் மாநாடு ரத்தா?
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வரும் நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் சார்க் அமைப்பின் 19-ஆவது சார்க் மாநாடு நடக்க இருந்த நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்க முடியாது என்று இந்தியா மறுத்துவிட்டது.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் நடத்தப்பட்டதாக கருதப்ப்டும் உரி தாக்குதல் சம்பவத்தின் காரணமாக இந்தியா இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்ததை அடுத்து ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளும் மாநாட்டில் பங்கேறக்கப் போவதில்லை என்று அறிவித்தன.
ஒன்பது நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் சார்க் அமைப்பில் 4 நாடுகள் பங்கேற்க மறுத்துவிட்டதால் இந்த மாநாட்டை ரத்து அல்லது ஒத்தி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரத்து செய்யப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம் உண்டு என்று தெரிய வந்துள்ளதால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது.