அதிர்ச்சி தகவல்
முதல்கட்ட ஊரடங்கு ஏப்ரல் 14 வரையிலும், இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3 வரையிலும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மே 4ம் தேதிக்கு மேல் ஊரடங்கு நீடித்தால் இந்தியாவில் 4 கோடி மொபைல் போன்களுக்கு ஆபத்து என்று அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது
தற்போதைய கணக்குப்படி இந்தியாவில் 2.5 கோடி பேர்களின் மொபைல் போன்கள் இயங்காமல் உள்ளன என்றும், பல்வேறு காரணங்களால் மொபைல் போன்கள் ரிப்பேராகி உள்ள காரணத்தினால் ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள் இல்லாததால் இயங்காமல் இருப்பதாகவும் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கின்றது
இதே நிலை நீடித்தால் அதாவது மே 3ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீடித்தால் இந்தியாவில் 4 கோடி பேர் மொபைல் போன்கள் ரிப்பேர் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் அவர்களுடைய மொபைல் போன் இயங்காத நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன
எனவே ரீசார்ஜ் கடைகள் மற்றும் மொபைல் ரிப்பேர் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது