ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் கைகளுக்கு பெரிதாக இருக்கின்றதா, ஆப்பிள் நிறுவனம் இதற்கான தீர்வை கண்டுபிடித்து விட்டது. ஸ்மார்ட்போன் சந்தையில் நிலவும் செய்திகளின் படி 4 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் 6 மினி 2015 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.ஆப்பிள் இன்ஸைடரின் படி ஐபோன் 6 மினி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் ஐபோன் 5எஸ் போன்றும் வடிவமைப்பு ஐபோன் 6 போன்று இருக்கும் என்றும் தெரிவிக்ப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் 4 இன்ச் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த ஸ்மார்ட்போன் 2015 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியாகும் என்றும் கோவென் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் புதிய ஐபோன் 6 மினி ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் போன்ற வடிவமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 5சி ஸ்மார்ட்போனின் மாற்றாக இந்த ஸ்மார்ட்போன் அமையும் என்றும் கூறப்படுகின்றது. ஐபோன் 6 மினி குறைநத செலவில் தயாரிக்கப்படுவதோடு இதில் குவால்காம் பிராசஸர் பொருத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.