தம்பியின் திருமணத்திற்கு 4 கிலோ எடையில் தங்க சட்டை அணிந்து வந்த ஜவுளி அதிபர்.

gold shirt 1மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் பங்கஜ் பராக் என்பவர் நேற்று தனது சகோதரரின் திருமணத்திற்கு வந்தபோது 4 கிலோ தங்கத்தினால் ஆன சட்டையை அணிந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவருடன் செக்யூரிட்டி அதிகாரிகளும் உடன் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி படிப்பு வரை மட்டுமே படித்துள்ள பங்கஜ் பராக் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற தனது சகோதரரின் தம்பியின் திருமண நிகழ்ச்சியில் 4 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட தங்க சட்டை அணிந்து கலந்து கொண்டார். தங்க சட்டை அணிந்து வந்த இவரை பார்த்ததும் திருமணத்திற்கு வந்தவர்கள் மணமக்களை விட இவருடன் புகைப்படம் எடுத்து கொள்ளவே அதிக ஆர்வம் கொண்டனர். ஒருசிலர் தங்களது செல்போன்களில் ‘செல்பி’ எடுத்து கொண்டனர். பத்து விரல்களிலும் மோதிரங்கள், இரண்டு கைகளிலும் பெரிய பிரேஸ்லட், தங்க வாட்ச், தங்க பிரேமில் ஆன கண்ணாடி என ஒரு நடமாடும் தங்க மாளிகையாக இருந்த அவரை பார்த்து அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர்.

பின்னர் பங்கஜ் பராக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எனக்கு சிறு வயதிலிருந்தே தங்கம் மீது அலாதி பிரியம். எப்போதும் நான் 3 கிலோவுக்கு குறையாமல் தங்க நகைகளை அணிவது வழக்கம்.

தற்போது கூட நான் 3 கிலோ தங்க நகைகளை அணிந்துள்ளேன். எனது மூக்கு கண்ணாடி கூட 30 கிராம் எடையில் செய்யப்பட்டது. எனது 45-வது பிறந்தநாள் வெள்ளிக்கிழமை (இன்று) வருகிறது. இதற்காக சுமார் ரூ. 1 கோடி செலவில் தங்க சட்டை தைத்து அணிந்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால் ஒரு நாள் முன்னதாக எனது தம்பியின் திருமணம் நடைபெறுவதால் இதற்காக இந்த சட்டையை அணிந்து கொண்டேன், என்றார்.

Leave a Reply