40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: சரத்குமார் அறிவிப்பு
அதிமுக கூட்டணியா? திமுக கூட்டணியா? அல்லது இரண்டுமின்றி தனித்து போட்டியா? என்ற குழப்பத்தில் தேமுதிக இருக்கும் நிலையில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என அதிரடியாக சரத்குமார் அறிவித்துள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடுவதாகவும் இந்த முடிவு கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் எடுக்கபட்டதாகவும் சரத்குமார் தெரிவித்தர்.
தேமுதிகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஆனால் அக்கட்சி தங்களது அழைப்பை ஏற்காமல், அதிமுக, திமுகவுடன் பேசி வருவதால் தனித்து போட்டி என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்