40 வயதினிலே… பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய வாழ்க்கை முறை!

40 வயதினிலே… பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய வாழ்க்கை முறை!

அக்கா…’, `அண்ணா…’ என்று கூப்பிட்டுக்கொண்டிருந்த பிள்ளைகள் எல்லாம் நம்மை ‘ஆன்ட்டி…’ `அங்கிள்…’ என்று கூப்பிடும் காலம் ஒன்று- டயட்டீஷியன் உண்டு. அது 40 வயதை நெருங்கும் பருவம். இந்த வயதில் மனம் பக்குவப்பட்டிருந்தாலும், உடல் அனைத்து வேலைகளையும் செய்ய ஒத்துழைக்காமல் பின்வாங்க ஆரம்பித்திருக்கும். இந்த நேரத்தில் உடலின் மாறுதல்களை கவனித்து, உரிய சிகிச்சை செய்து, சரியான வாழ்க்கை முறையை மேற்கொள்கிறவர்கள் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்; அலட்சியப்படுத்துபவர்கள் விரைவிலேயே முதுமைக்கும் பல்வேறுவிதமான நோய்களுக்கும் ஆளாகி இன்னல்படுகிறார்கள். 40 வயதை அடைந்தவர்கள், நெருங்குகிறவர்கள் அவசியம் செய்யவேண்டிய சில பின்பற்றவேண்டிய வாழ்க்கை முறைகள், பரிசோதனைகள் இங்கே..

ஆரோக்கிய வாழ்க்கை

உணவு

* வயது கூடக் கூட நம் செரிமான சக்தி குறைய ஆரம்பிக்கும். அதனால் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய, அதே நேரத்தில் சத்தான உணவைச் சாப்பிடவேண்டியது அவசியம்.

* கொழுப்புச்சத்து குறைவான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதன் மூலம் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம். அதிகமான எண்ணெய், துரித உணவுகள், வறுத்த-பொரித்த உணவுகளைத் தவிர்க்கவும்.

மூட்டு வலி

* 40-களில் இருப்பவர்கள், கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும். இவை, எலும்பு உறுதிக்கு உதவும்; ஆஸ்டியோபோரோசிஸ் என்ற மூட்டு தேய்மானம் வராமல் தடுக்கும். பால், ராகி, கீரை வகைகள், மீன், நண்டு ஆகியவற்றை அதிகமாகச் சாப்பிடலாம்.

* காபி, டீ மற்றும் கோலா பானங்களை அடியோடு தவிர்க்கவும். இவற்றை அதிகம் அருந்துவதால், தூக்கமின்மைப் பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

* உணவுக்கு முன்னர் ஏதாவது ஒரு சூப் குடிப்பது நல்லது. இது, செரிமானத்துக்கு உதவும்.

* புரதம், வைட்டமின், மினரல்ஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

* காய்கறிகள், பழங்கள் முதலியவை ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தவை. எனவே, அவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆரோக்ய உணவு

* நன்கு வெந்த, இதமான உணவுகளையே சாப்பிட வேண்டும். வேகாத, கடினமான உணவுப் பொருட்கள் பற்களின் வலிமையைக் குறைத்துவிடும்.

* இட்லி, இடியாப்பம், புட்டு போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ளவும்

* உணவில் அதிக உப்பு வேண்டாம். உப்பைக் குறைப்பது ஆரோக்கியத்துக்கு நல்வரவு சொல்லும் முதல் படி.

* தினமும் மூன்று வேளை பசும்பால் குடிக்கலாம். இதில் உள்ள கால்சியம் சத்து நமது எலும்புகளை பலப்படுத்த உதவும்.

* தினமும் ஒரு வாழைப்பழம் அல்லது ஒரு கொய்யா சாப்பிட்டால், செரிமானக் கோளாறுகள் வராமல் தடுக்க முடியும்.

* தண்டுக்கீரை, பருப்புக் கூட்டு போன்ற உணவுகள் பலவீனமான உடல் உள்ளவர்களுக்கு சக்தி தர உதவும்.

வாழ்வியல் முறையில் கடைப்பிடிக்கவேண்டியவை…

* புகைபிடித்தல், குடிப்பழக்கம், பாக்கு போடுதல் போன்ற பழக்கங்களை அடியோடு விட்டுவிட வேண்டும்.

* தினமும் 30 நிமிட நடைப்பயிற்சி மேற்கொள்ளவேண்டியது அவசியம். காலையில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி மேற்கொள்வது எலும்பு மற்றும் தசைகள் பலம் பெற உதவும்.

உடற்பயிற்சி

* ஏரோபிக் பயிற்சிகள் நுரையீரல் காற்றளவை அதிகப்படுத்தி, சீரான சுவாசத்துக்கு உதவும். இதனால் இதயம் தொடர்பான நோய்களில் இருந்து காத்துக்கொள்ளலாம்.

* நல்ல அமைதியான சூழ்நிலையில் இருக்கவேண்டியது மன ஆரோக்கியத்துக்கு நல்லது.

* தினமும் நமக்காகவே சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில், நமக்குப் பிடித்தவற்றைச் செய்ய வேண்டும். இதனால் சந்தோஷமான மனநிலை கிடைக்கும்… இவை ஆரோக்கியத்துக்கு உதவும்..

* உணவை அள்ளிப் போட்டுக்கொள்ளாமல், கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட வேண்டும்.

* இனிப்புப் பண்டங்களை தவிர்ப்பது நல்லது. இதன் மூலம், பல்சொத்தையாவது, சர்க்கரைநோய், உடல்பருமன், கொலஸ்ட்ரால் ஆகிய பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.

* தினமும் போதுமான அளவு (2 1/2 லிட்டர் – 3 லிட்டர்) தண்ணீர் குடிப்பதால், மலச்சிக்கல், டீஹைடிரேஷன் எனப்படும் நீர்க் குறைபாடு போன்ற பிரச்னைகள் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.

Leave a Reply