நைஜீரியாவை சேர்ந்த 40 பேர் தண்ணீர் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தனர்

ஆப்ரிக்க நாடான சோமாலியா மற்றும் எரிட்ரியா நாட்டில் இருந்து ஏராளமான மக்கள் பிழைப்பு தேடி கடல் வழியாகவும், வாகனங்களிலும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் நைஜீரியாவை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட 60 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 வாகனங்களில் அல்ஜீரியாவின் டமாரன்ராசெட் நகருக்கு அகதிகளாக சென்றனர்.

சகாரா பாலைவனத்தை கடந்து செல்லும் போது நைஜர் வடபகுதியான அர்லிட் நகரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் அவர்களது டிரக் பழுதானது. இதனால் பாலைவனத்தில் சிக்கிய அகதிகள் சிறு குழுக்களாக பிரிந்து தண்ணீர் மற்றும் உதவி தேடி சென்றனர்.

ஆனால், இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களாக இருந்ததால் அவர்களால் மணல் பரப்பில் நீண்ட தூரம் நடந்து செல்ல முடியவில்லை.

வெயிலின் தாக்கத்தால் சோர்வடைந்த அவர்கள் தண்ணீர் கூட கிடைக்காமல் நாக்கு வறண்டு இறந்தனர்.

இவர்களது சடலங்களை மீட்ட போலீசார், காணாமல் போன மற்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply