400 வார்டன்கள் உடனடி நியமனம்!! அமைச்சர்

ராமநாதபுரம் பரமக்குடியில் தனியார் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார்.

அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 400 வார்டன்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 400 வார்டன்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.