உலக வரலாற்றில் முதல் சம்பவம் நுரையீரல் தானம் கொடுத்த 41 நாள் குழந்தை
உலக வரலாற்றில் முதல்முறையாக பிறந்து 41 நாட்களே ஆன குழந்தை நுரையீரல் தானம் கொடுத்துள்ளது. உலகம் தோன்றியது முதல் முறையாக நடந்துள்ள இந்த சம்பவம் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு பெற்றோருக்கு பிறந்த ஆர்மோண்டி என்ற ஆண் குழந்தை பிறந்து நாற்பது நாட்களே ஆன நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அந்த குழந்தை பிழைப்பது கடினம் என்று டாக்டர்கள் கைவிட்டுவிட்டனர். ஆனால் இந்த சோகத்திலும் அந்த பெற்றோர் தங்களது குழந்தையின் நுரையீரலை தானம் செய்ய முடிவு செய்தனர்.
இமோகன் போல்டன் என்ற ஐந்து மாத பெண் குழந்தைக்கு இந்த குழந்தையின் நுரையீரலை மாற்ற முடிவு செய்யப்பட்டது. உடனடியாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது தியோவின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளது.
ஆர்மோண்டி தனது நுரையீரலை தானம் கொடுத்துள்ளதால், மிகச்சிறிய வயதில் அதாவது 41-வது நாளில் உடல் உறுப்பை தானம் செய்த பச்சிளம் குழந்தை என்ற பெயரை பெற்றுள்ளான்.