42 வகையான மருந்துகளின் விலை 15 சதவீதம் குறைப்பு. வெங்கய்யா நாயுடு தகவல்

42 வகையான மருந்துகளின் விலை 15 சதவீதம் குறைப்பு. வெங்கய்யா நாயுடு தகவல்

vengaiya-naiduபுற்றுநோய் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கள் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடவோ அல்லது குணமாகவோ லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் இதுபோன்ற பெரிய நோய்கள் நடுத்தர வர்க்கத்தினர்களை தாக்கும் சமயத்தில் அவர்களுடைய குடும்பமே நிலைகுலைந்து போய்விடுகிறது.

இந்த நிலையை தடுக்க புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு இதற்கான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “புற்றுநோய், காசநோய், மனநோய், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கான 42 வகையான மருந்துகளின் விலை 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இது பாஜகவின் ‘அனைவருக்குமான அரசு’ கொள்கையின் வெளிப்பாடு எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு டுவீட்டில், “விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி. இந்தியன் பொட்டாஷ் லிமிடட் முரியேட் ஆஃப் பொட்டாஷ் உரத்தின் விலையை பை ஒன்றுக்கு ரூ.200 வீதம் குறைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply