44 லட்சம் யூடியூப் சேனல்கள் நீக்கம்.

உலகம் முழுவதும் 44 லட்சத்துக்கும் அதிகமான யூடியூப் சேனல்களை நீக்கி உள்ளதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக விதிமுறைகளை மீறியதற்காகவும், ஸ்பேம் ரக வீடியோக்களை பதிவேற்றியதற்காகவும் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் 44 லட்சம் யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் 11 லட்சம் வீடியோக்கள் அகற்றப்பட்டுள்ளன.