ரஷ்யாவில் நடைபெற இருந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்து பெருமைப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் நடைபெறுவதாக இருந்த 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் உலக செஸ் வீரர் மற்றும் வீராங்கனைகளை வரவேற்பதாக இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
52 நாடுகளை சேர்ந்த சுமார் 2000 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள சென்னைக்கு வரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.