ஈராக் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட 46 நர்ஸ்கள் மும்பை வந்து சேர்ந்தனர்.

nursesஈராக் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருந்த  தமிழக நர்ஸ்கள் உள்பட 46 இந்திய நர்ஸ்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் இந்திய தூதரகத்தின் உதவியால் நேற்று ஈராக்கில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர்.

விடுவிக்கப்பட்ட நர்ஸ்களை அழைத்து வருவதற்காக நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டஏர் இந்தியா விமானத்திற்கு சொந்தமான போயிங் 747 விமானம், தமிழக நர்ஸ்கள் உட்பட 46 நர்ஸ்களை அழைத்துக்கொண்டு இந்தியா வந்தது. அவர்கள் அனைவரும் இன்று  பகல் 12 மணியளவில் கொச்சி வந்து சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொச்சி விமான நிலையத்தில் நர்ஸ்களுக்கு தேவையான முதலுதவி உள்பட அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் இருப்பதாக விமான நிலைய இயக்குநர் ஏ.சி.கே.நாயர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

ஈராக் நாட்டில் திக்ரித் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த இந்த 46 நர்ஸ்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கடத்திச் சென்றனர். இதையடுத்து, தீவிரவாதக் குழுக்களுடன் இந்திய தூதரகம், சமூக ஆர்வலர்கள், சர்வதேச அமைப்புகள் மூலம்  பேச்சுவார்த்தை நடத்தியதின் பயனாக நேற்று அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Leave a Reply