நாட்டில் முதல்முறையாக ரூ.4 கோடி கள்ளநோட்டுக்கள் பறிமுதல்.

இந்தியாவிலேயே முதல்முறையாக அதிக அளவில் இன்று காலை கள்ளநோட்டுக்கள் இன்று பெங்களூரில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 5 பேர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெங்களூர் கே.ஆர்.புரம் விநாயகா லே அவுட் பகுதியில் இன்று காலை சந்தேகத்துக்கிடமாக இருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது கள்ளநோட்டுக்களை மாற்ற இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அருகில் உள்ள வீடு ஒன்றில் ரூ.4 கோடி மதிப்புள்ள 1000 ரூபாய் கள்ளநோட்டுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய தொகையுள்ள கள்ளநோட்டுக்கள் ஒரே நேரத்தில் பிடிபடுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மேலும் 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீஸார், அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். காவல்துறை இணை ஆணையர் ஹேமந்த் லிம்பவானி தலைமையில் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply