வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவையை வெறும் 29 ரூபாய்க்கு அளிக்க ஐடியா செல்லுலார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன. இந்த நிலையில் ஐடியா செல்லுலார் நிறுவனம் தென் இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சுமார் 75 நகரங்களுக்கு தனது 4ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் 2 மற்றும் 3 தர நகரங்களில் அதிகளவில் கவனத்தைச் செலுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அறிமுகச் சலுகை மற்றும் குறைந்த விலை கட்டணமாக 4ஜி சேவையை வெறும் 29 ரூபாய்க்கு அளிக்க ஐடியா செல்லுலார் திட்டமிட்டுள்ளது.
2016-ல் மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் 750 நகரங்களுக்குத் தனது அதிவேக 4ஜி சேவையைக் கொண்டு சேர்க்க ஐடியா செல்லுலார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Chennai Today News: 4G service in just Rs.29