ஆஷஸ் 4வது டெஸ்ட்-ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஆஷஸ் டெஸ்ட் தொடர் 4வது டெஸ்ட் போட்டியிலும்  இங்கிலாந்து படு தோல்வி அடைந்து தொடரில்  0- 4   என்று மிகவும் மோசமான நிலைமைக்கு சென்றுள்ளது.

முதல் இன்னிங்சில்  இங்கிலாந்து  255  ரன்னும்,  ஆஸ்திரேலியா  204  ரன்னும் எடுத்தன.   51  ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் அபாரமான பந்து வீச்சில்  179 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.ஆஸ்திரேலியா அணிக்கு 231 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 3-ம் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 30 ரன் எடுத்து இருந்தது.

இன்று 4-ம் நாள் ஆட்டம் நடந்தது. தொடக்க வீரர் வார்னர் 25 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் ரோஜர்ஸ்-வாட்சன் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் இங்கிலாந்து பந்து வீச்சை திணறடித்து ரன்களை குவித்தனர். ரோஜர்ஸ் சதம் அடித்தார். அவர் 116 ரன்னில் அவுட் ஆனார்.

2-வது விக்கெட்டுக்கு ரோஜர்ஸ்-வாட்சன் ஜோடி 136 ரன் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 51.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன் இலக்கை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வாட்சன் 83 ரன்னுடனும், கிளார்க் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ஆட்டநாயகனாக மிட்செல் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார்.

ஆசஷ் தொடரின் முதல் 3 டெஸ்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. தற்போது 4-வது டெஸ்டிலும் வெற்றி வாகை சூடியது.

இங்கிலாந்து 4-வது தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அடைந்தது.5-வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 3-ந் தேதி சிட்னியில் நடக்கிறது.

Leave a Reply