கிட்டத்தட்ட இயல்புநிலையா?
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருக்கும் 5ஆம் கட்ட ஊரடங்கில் இதுவரை இல்லாத வகையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் உண்மையில் இது ஊரடங்கு உத்தரவா? அல்லது இயல்பு நிலை திரும்பியதற்கான உத்தரவா? என்ற கேள்வி எழுந்துள்ளது
குறிப்பாக ஜூன் 8 முதல் ஹோட்டல்கள், மால்கள், திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூழ்நிலையைப் பொருத்து திரையரங்குகளும் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4ஆம் கட்ட ஊரடங்கில் மதுக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன
மேலும் சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் ஆட்டோக்கள் சலூன் கடைகளும் இயங்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் தற்போது மால்கள் தியேட்டர்கள் வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு விட்டால் வேறு என்ன கட்டுப்பாடு என்ற கேள்வி எழுந்துள்ளது
சர்வதேச விமானங்கள் மற்றும் இரவு 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெளியே வரக்கூடாது ஆகிய இரண்டைத் தவிர இயல்பு நிலையில் வேறு எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது எனவே இது ஐந்தாம் கட்ட ஊரடங்கு என்று கூறுவதைவிட இயல்பு நிலை திரும்பி விட்டதற்கான நிலை என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.