5 ஆண்டுகளுக்கு பின்னர் ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

5 ஆண்டுகளுக்கு பின்னர் ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி திருச்சியில் முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் சகோதரர் ராமஜெயம் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த வழக்கை கடந்த ஐந்து ஆண்டுகளாக சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், தற்போது இந்த விசாரணை சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிபிஐ இந்த வழக்கை விசாரித்து மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் தற்போது சிபிஐ சம்பந்தப்பட்டுள்ளதால் இந்த வழக்கின் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply