5 ஆண்டுகள் விஸ்வாசம்: கருணாஸ் திடீர் பல்டி

5 ஆண்டுகள் விஸ்வாசம்: கருணாஸ் திடீர் பல்டி

கடந்த சில மாதங்களாக அதிமுகவுக்கு எதிராகவும், முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்தும் பேசி வந்த நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் திடீரென அதிமுக அரசுக்கு முழு ஐந்து ஆண்டுகள் விஸ்வாசமாக இருக்க முடிவு செய்துள்ளதாக திடீர் பல்டி அடித்துள்ளார்.

நேற்று சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டதொடரின்போது பேசிய கருணாஸ், ‘ஜெயலலிதா ஆசியால்தான் தான் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டதாகவும், அந்த விஸ்வாசத்திற்காக அதிமுகவின் ஐந்து ஆண்டு முழு ஆட்சிக்காலம் வரை அதிமுகவுக்கு ஆதரவாக முழு 5 ஆண்டுகாலம் விஸ்வாசமாக இருப்பேன்’ என்றும் கூறியுள்ளார்.

தினகரன் அணிக்கு கடந்த சில மாதங்களாக ஆதரவாக இருந்த நிலையில் சமீபத்தில் அவர் மீது முதல்வரை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அவர் அதிமுக அரசுக்கு ஆதரவு என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply