5 மாநில சட்டமன்ற தேர்தல்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு
ஒரு மினி பாராளுமன்ற தேர்தல் போல் நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில தேர்தலின் கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது.
இதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என இந்தியா டுடே மற்றும் டைம்ஸ் நவ் ஊடகங்கள் கணித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு அணிகளுமே கிட்டத்தட்ட சமநிலையில் தொகுதிகளை பெறும் என்பதால் இதர கட்சிகள் ஆதரவு தரும் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் மிசோரமில் காங்கிரஸ் மற்றும் மிசோரம் தேசிய முன்னணி இரண்டுக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கணிப்புகள் தெரிவித்துள்ளன. தெலுங்கானாவில் மீண்டும் சந்திரசேகரராவ் முதல்வர் ஆவார் என கணிக்கப்பட்டுள்ளது