5 மாநில தேர்தலுடன் தெலுங்கானா தேர்தல் நடக்குமா? சந்திரசேகரராவ் அவசரப்பட்டுவிட்டாரா?
ராஜஸ்தான், உள்பட 4 மாநிலங்களுக்கு வரும் டிசம்பரில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதால் அந்த தேர்தலுடன் தெலுங்கானா தேர்தலையும் நடத்தும் வகையில் சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தனது ஆட்சியை கலைக்க பரிந்துரை செய்தார்.
ஆனால் தலைமை தேர்தல் ஆணையம் தெலுங்கானா மாநில தேர்தலை வரும் டிசம்பரில் நடத்துவது குறித்து இன்னும் உறுதிகூறவில்லை. ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய, நான்கு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ளது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதோடு சேர்த்து, தெலுங்கானா சட்டசபை தேர்தலை நடத்தவும், தேர்தல் ஆணையம் தயார்.
ஆனால் அதே நேரத்தில் தெலுங்கானா மாநில தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து, அங்குள்ள நிலவரம் குறித்து அறிக்கை கோரப்படும். அதன் பின், தெலுங்கானா சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்