5 ஸ்பைசஸ் பலன்கள்
‘பத்து மிளகு இருந்தால், பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ எனச் சொல்வார்கள். மிளகு மட்டும் அல்ல நம் அஞ்சறைப்பெட்டியில் உள்ள ஒவ்வொரு பொருளுமே ஆரோக்கியம் காக்கும் அற்புத சஞ்சீவினிகள்தான்.
மிளகு
தும்மல் , மூச்சடைப்புப் பிரச்னையைச் சரிசெய்யும்.
உடல் பருமனைக் குறைக்கும்.
தொண்டைக்கட்டுப் பிரச்னைக்கு நல்லது.
ஃபைப்பரின் சத்து நிறைந்தது.
எப்படிப் பயன்படுத்துவது?
மிளகு சூப், மிளகு ரசம், மிளகு சாதம் செய்து சாப்பிடலாம். பொங்கல், குழம்பு போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.
சோம்பு
சிறுநீரைப் பெருக்கும்.
உடலில் நச்சுக்களை அகற்றும்.
இளம்பெண்களுக்கு நல்லது.
செரிமானப் பாதையில் ஏற்படும் வலிகளை அகற்றும்.
எப்படிப் பயன்படுத்துவது?
சோம்பைப் சுத்தப்படுத்தி அப்படியே சாப்பிடலாம். சோம்பு நீர் அருந்தலாம். சமையலில் மசாலாவுக்குச் சேர்க்கலாம்.
சீரகம்
பித்தத்தைச் சரிசெய்யும்.
நெஞ்சுச்சளியைக் குணமாக்கும்.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
செரிமானத்தைச் சீராக்கும்.
எப்படிப் பயன்படுத்துவது?
சீரகத்தை வறுத்து, தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
ரசத்தில் சீரகத்தைச் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
கடுகு
தசை வலி, உடல் வலி நீங்கும்.
உடலில் வெப்பத்தை அதிகரிக்கும்.
உடலில் இருக்கும் வீக்கங்களைச் சரிசெய்யும்.
உணவுக்கு மணத்தைக் கூட்டும்.
எப்படிப் பயன்படுத்துவது?
கடுகு எண்ணையைச் சமையலில் சேர்க்கலாம். சாம்பார், ரசம், தயிர் என தினமும் ஏதாவது ஒரு வகையில் தாளிப்பில் பயன்படுத்தலாம்.
கிராம்பு
பூஞ்சைத் தொற்றுகளை அகற்றும்.
வாந்தி உணர்வைப் போக்கும்.
வைட்டமின் கே, துத்தநாகம், ஃபோலேட் சத்து உள்ளன.
பல்வலிக்குச் சிறந்த நிவாரணி.
எப்படிப் பயன்படுத்துவது?
கிராம்பைப் பொடிசெய்து, பல் துலக்கப் பயன்படுத்தலாம். மிகக்குறைவாக அவ்வப்போது சமையலில் சேர்க்கலாம். கிராம்பைத் தைலமாக்கிப் பயன்படுத்தலாம்.