ஐடி ஊழியர்களுக்கு ஆபத்து: 2 லட்சம் பேர் வேலையிழக்க வாய்ப்பு
கடந்த சில ஆண்டுகளாகவே ஐடி துறை வீழ்ச்சியில் உள்ள நிலையில், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. மேலும் ஐடி நிறுவனங்கள் இடையேயான போட்டி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை ஐடி துறை ஆட்டம் கொள்ள செய்துள்ளது.
இதனால் ஐடி ஊழியர்கள் பல நீக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த மூன்று மாதங்களில் 2 லட்சம் ஐடி ஊழியர்களும், அடுத்த மூன்று ஆண்டுகளில் 7 லட்சம் ஊழியர்களும் தங்கள் வேலையை இழக்கும் அபாயம் உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகின்றது.
போட்டியை சமாளிக்கும் வகையில் அப்டேட்டில் இல்லாதவர்கள், தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ளாத 50 முதல் 60 சதவீதத்திலான ஊழியகர்களின் பணியை பறிக்க ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது
லட்சக்கணக்கில் சம்பளம் வரும் ஒயிட் காலர் வேலை காரணமாக வீடு, கார், பப் என ஆடம்பர வாழ்க்கையில் வாழ்ந்து வரும் ஐடி ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியே என்பது குறிப்பிடத்தக்கது