குமரியில் சீறிய கடல்: படகுகள் இழுத்து செல்லப்பட்டதால் பரபரப்பு

குமரியில் சீறிய கடல்: படகுகள் இழுத்து செல்லப்பட்டதால் பரபரப்பு

குமரிக்கடலில் நேற்று இரவு முதல் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என ஏற்கனவே வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை கரையில் இடைவெளி விட்டு பத்திரமாக நிறுத்தி வைக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் கடல் பயங்கர சீற்றத்துடன் காட்சியளித்தது. இந்த சீற்றத்தால் 5 படகுகளை கடலுக்குள் அலை இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேங்காய் பட்டினம், இரயுமன் துறையில் இந்த 5 படகுகளை கடல் அலை இழுத்துச்சென்றதாகவும், இதனால் மீனவர்கள் வேதனையுடன் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply