புயல் நிவாரண நிதிக்காக களமிறங்கிய முன்னாள் 5 அமெரிக்க அதிபர்கள்
நம்மூரில் ஆளுங்கட்சி தலைவர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் எலியும் பூனையும் போல எதிரிகள் போல் இருக்கும் நிலையில் அமெரிக்காவில் புயல் நிவாரண நிதி திரட்ட கட்சி பேதங்கள் இல்லாமல் ஐந்து முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.
அமெரிக்காவில் இர்மா புயல் கோரத்தாண்டவம் ஆடி நிலைகுலைய செய்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிர்ச்சேதம் இல்லையெனினும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் நாசம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் புயல் நிவாரண நிதி திரட்ட முன்னாள் அமெரிக்க அதிபர்களான ஜார்ஜ் புஷ், ஜார்ஜ் டபிள்யூ.புஷ், பில் கிளிண்டன், ஒபாமா, ஜிம்மிகார்ட்டர் ஆகியோர் இணைந்துள்ளனர். பெரிய தொழிலதிபர்கள், நிறுவனங்கள் ஆகியோர்களிடம் இவர்கள் நிதி திரட்டவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஐந்து அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஒன்றிணைந்துள்ளதால் பெருமளவு நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.