நேபாளத்தில் 5 இந்திய போலீசார் கைது. ஏ.கே47 உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்
குற்றவாளிகளை தேடி நேபாள எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட ஐந்து இந்திய போலீஸார் நேபாள போலீஸார்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் டாக்டர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த சில நாட்களாக குற்றவாளிகளை தேடி வந்த பஞ்சாப் போலீஸார் நேபாளத்தில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேபாளத்தில் உள்ள அச்ஹம் என்ற பகுதியில் அவர்கள் தேடிக் கொண்டிருந்த போது நேபாள போலீஸார்களால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இந்திய போலீஸார்களிடம் இருந்த ஏகே-47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்களை நேபாள போலீசார் பறிமுதல் செய்தனர். இந்திய போலீஸார்களை விடுவிக்க இந்திய நேபாள அதிகாரிகள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.