மளிகைக்கடையிலும் கேஸ் சிலிண்டர் விற்பனை. மத்திய அரசின் புதிய திட்டம்.

cylinderசமையல் எரிவாயு சிலிண்டருக்காக மாதக்கணக்கில் காத்துக்கொண்டிருந்த காலம் போய் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் சாதாரண மளிகைக்கடையில் கிடைக்கக்கூடிய பொருளாக மாறிவிட்டது. மளிகைக் கடைகளில் 5 கிலோ சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு நேற்று முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை, சில குறிப்பி\ட்ட நகரங்களில் மட்டுமே  சமையல் எரிவாயு முகமை மையங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போது இந்த திட்டம் அனைத்துப் பெருநகரங்களிலும் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள், பெரிய மளிகைக் கடைகளுக்கும் மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி மளிகைக்கடைகளிலும் இனி மானிய விலையிலேயே 5 கிலோ எரிவாயு உருளைகள் விற்பனை செய்யப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஆண்டுக்கு 34 சிலிண்டர்கள் ரூ.155 வீதம் மானிய விலையில் ஒரு குடும்பத்துக்கு விநியோகிக்கப்படும். இந்த விலை டில்லியில் மட்டுமே. மற்ற நகரங்களில் சிலிண்டர்களின் விலையில் சற்று மாறுதல் இருக்கும்

இந்த புதிய திட்டம் நேற்று நல்லாட்சி தினத்தை முன்னிட்டு தில்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

இது புதிய திட்டம் அல்ல. அதேவேளையில், நல்லாட்சி தினத்தையொட்டி, இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அதன் அடிப்படையில் மளிகைக் கடைகளிலும் எரிவாயு உருளை விற்பதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு நாடு முழுவதும், 610 பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எரிவாயு உருளை விற்கப்பட்டு வந்தது. தற்போது அதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிராமப் பகுதிகளில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு சலுகை விலையில் எரிவாயு இணைப்பு தரும் திட்டம் அமலில் உள்ளது. தற்போது அந்தச் சேவை நகர்ப்புறத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply