தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 5 தமிழக வேட்பாளர்கள் தகுதி நீக்கம்.

election-commission-indiaகடந்த மே மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் இதுவரை செலவு கணக்கை காட்டாத வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவின் பேரில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மேகராஜ் மல்லர், சரவணன், மதுரையில் போட்டியிட்ட சந்திரபோஸ், தூத்துக்குடியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சாந்தாதேவி, வின்ஸ்டன் ஆண்டோ ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர்.

மேலும் மேற்கண்டவர்கள் மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டிருந்தால் அந்தப் பதவியில் இருந்தும், தேர்வு செய்யப்படுவதில் இருந்தும் 3 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள்” என்றும் இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை ஒன்றி கூறப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே பலமுறை தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யுமாறு அறிவிப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிய நிலையிலும் இதுவரை செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது தற்போது தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply