உ.பியில் ஆட்சியை பிடிக்கின்றது பாஜக. பஞ்சாப், கோவாவில் காங். முன்னிலை

உ.பியில் ஆட்சியை பிடிக்கின்றது பாஜக. பஞ்சாப், கோவாவில் காங். முன்னிலை

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்து சாதனை புரிந்துள்ளது. மொத்தமுள்ள 400 தொகுதிகளில் பாஜக 255 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால் உபியில் பாஜக ஆட்சி அமைக்கின்றது.

அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் 55 தொகுதிகளிலும் அகாலிதளம் 24 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 23 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றது.

அதேபோல் மணிப்பூரில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் தலா 5 தொகுதிகள் என சம அளவில் முன்னிலை வகித்து வருகிறது. உத்தர்காண்ட் மாநிலத்தில் பாஜக 55 தொகுதிகளிலும் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர்களை அறிவிக்காமல் பிரதமர் மோடியை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply