உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தல் எப்போது?

உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தல் எப்போது?

electionஉத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் வரும் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தென் மாநிங்களான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் வட மாநிலங்களில் முக்கிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம் பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உத்தரபிரதேசம் தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தவும், உ.பியில் மட்டும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தவும் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

மேலும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன் முக்கிய அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை செய்ய தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த ஆலோசனை விரைவில் வ்நடைபெறும் என தெரிகிறது

Leave a Reply