அமெரிக்கா: நைட்கிளப்பில் மர்ம மனிதன் சரமாரி துப்பாக்கி சூடு. 50 பேர் பலி
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகானத்தில் நைட் கிளப் ஒன்றில் மர்ம மனிதன் ஒருவர்ன் நேற்று கண்மூடித்தனமாக சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 50 பேர் வரை உயிரிழநததாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள டவுன் டவுன் ஆர்லந்தோ நகரில் உள்ள பல்ஸ் என்ற நைட்கிளப்பில் அதிகாலை நேரத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுடத்துவங்கினார். துப்பாக்கி சத்தம் கேட்டதும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிய பார்வையாளர்களையும் அந்த மனிதன் சரமாரியாக சுட்டதால் சம்பவ இடத்திலேயே 50 பேர் உயிரிழந்ததாகவும் 53 பேர் படுகாயம் அடைந்ததாகவும் போலீஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் ஒருசிலர் அபாயமான கட்டத்தில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்த கொடூர சம்பவத்தை கேள்விப்பட்டு உடனடியாக அங்கு வந்த போலீசார் மர்ம மனிதன் மீது பதில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் மர்ம மனிதன் கொல்லப்பட்டாலும் இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கக் கூடும் என்றும் மர்ம மனிதன் ஒரு அம்புதான் என்றும் அவனை எய்த கும்பலை விரைவில் பிடிப்போம் என்றும் ஆர்லந்தோ போலீசார் தெரிவித்துள்ளனர்.