மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்?

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்பை முடித்து விட்டு அரசு மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிய விருப்பமில்லை என்று எழுதிக் கொடுத்த மாணவர்களிடமிருந்து ரூபாய் 50 லட்சம் அபராதம் வசூலிக்க வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அரசு மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரியில் இதயவியல் நரம்பியல் சிறுநீரகம் உள்ளிட்ட உயர் படிப்புகள் படித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கண்டிப்பாக அரசு மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும்

ஆனால் அரசு மருத்துவமனைகள் பணி புரிய விருப்பம் இல்லை என்று தெரிவித்த மாணவர்களுக்கு 50 ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும் என அனைத்து கல்லூரி முதல்வருக்கு மருத்துவ கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது