தமிழகத்தில் 50 பேர்களுக்கு திடீரென கொரோனா! டெல்லியில் இருந்து திரும்பியவர்களா/
தமிழகத்தில் சற்றுமுன் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக இருந்த நிலையில் திடீரென 50 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 124 ஆக உயர்ந்துள்ளது
சமீபத்தில் டெல்லியில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தமிழகத்திற்கு திரும்பியவர்கள் 45 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்று முன்னர் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்
தமிழகத்தில் இருந்து மொத்தம் ஆயிரத்து 131 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதாகவும் அவர்களை 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளவர்களை கண்டறிய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது