கேமரா படத்தை பார்க்கும் போது 50 மெகாபிக்சல் கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவலின் படி லூமியா 930 போன்று 20 எம்பி கேமரா இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 எம்பி கேமராவோடு இல்லாமல் 4 ஆம் தலைமுறை எல்ஈடி ப்ளாஷ் வசதியும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பார்க்க கச்சிதமாகவும் அழகாகவும் இருக்கும் இதன் வடிவமைப்பை பார்க்கும் போது அலுமினியம் கொண்டு தயாரிக்கப்படிருக்கும்.
புதிய லூமியா இதற்கு முன் வெளியான மாடல்களை விட மெலிதாக இருக்கும் என்றும் தெரிகின்றது
டிஸ்ப்ளேவை பார்க்கும் போது 1080பி எஹ்டி ரெசல்யூஷன் மற்றும் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படலாம்
வழக்கமான விண்டோஸ் இயங்குதளத்தில் சில கூடுதல் மாற்றங்களோடு கிடைக்கும் என்பதால் மென்பொருட்களின் எண்னிக்கை அதிகரிக்கலாம்
மேலும் ஓடிஜி கேபிள் வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பதால், இதை கொண்டு மற்ற போன்களுக்கும் சார்ஜ் செய்ய முடியும்
மேலும் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் முதல் லூமியா போனாக இது இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.