தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டது. ஊழியர்களுக்கு மாற்று ஏற்பாடு
கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களிடம் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியின்படி பதவியேற்ற முதல் நாளே இரண்டு மணி நேரம் டாஸ்மாக் கடைகளின் வேலை நேரம் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் 500 மதுக்கடைகள் அதிரடியாக மூடப்பட்டது. மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வேறு இடங்களில் பணியாற்றுவதற்கான உத்தரவு விரைவில் பிறக்கப்படும் என்றும் இந்த கடைகளில் உள்ள மதுபானங்கள் குடோன்களுக்கு திருப்பி அனுப்பப்படும் என்றும் மற்ற மரச்சாமான்கள், பில் போடும் மெஷின் மற்றும் கடைக்கான ஆவணங்கள் போன்றவை சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் சரிபார்க்கப்படும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
நேற்று முதல் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் விபரங்கள்:
சென்னை மண்டலம்
சென்னை வடக்கு – 2
மத்திய சென்னை – 3
சென்னை தெற்கு – 2
காஞ்சீபுரம் வடக்கு – 13
காஞ்சீபுரம் தெற்கு – 3
திருவள்ளூர் கிழக்கு – 16
திருவள்ளூர் மேற்கு – 19
மொத்தம் – 58
கோவை மண்டலம்
கோவை வடக்கு – 1
கோவை தெற்கு – 4
திருப்பூர் – 8
ஈரோடு – 16
நீலகிரி – 31
மொத்தம் – 60
மதுரை மண்டலம்
மதுரை தெற்கு – 21
மதுரை வடக்கு – 16
திண்டுக்கல் – 10
ராம்நாடு – 36
விருதுநகர் – 27
சிவகங்கை – 43
நெல்லை – 9
தூத்துக்குடி – 30
கன்னியாகுமரி – 6
தேனி – 3
மொத்தம் – 201
திருச்சி மண்டலம்
திருச்சி – 14
நாகப்பட்டினம் – 16
தஞ்சாவூர் – 16
புதுக்கோட்டை – 14
கடலூர் – 15
கரூர் – 14
திருவாரூர் – 8
விழுப்புரம் – 29
பெரம்பலூர் – 7
மொத்தம் – 133
சேலம் மண்டலம்
சேலம் – 0
தர்மபுரி – 1
கிருஷ்ணகிரி – 6
நாமக்கல் – 11
வேலூர் – 8
திருவண்ணாமலை – 18
அரக்கோணம் – 4
மொத்தம் – 48