500 வருடங்களுக்கு முன்பு வரையப்பட்ட மோனலிசா ஓவியத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்கிறோம்,
1300 வருடங்கள் பழமைவாய்ந்த ஓவியம் தமிழகத்தில் இருபது எத்தனை நபர்களுக்கு தெரியும் ?
1300 வருட பல்லவர் ஓவியம் – தமிழன் கைவணம்!!!
செஞ்சி அருகே, பனைமலை என்ற இடத்தில் வெயில், மழை, பனி, வெட்டி ஆட்களின் கைவரிசை போன்ற பல இன்னல்களை தாண்டி இன்றும் இவ்வளவு உயிர்ப்புடன் வலது புறம் இருக்கும் இந்த ஓவியம் பல்லவர்களின் கைகளினால் வரையப்பட்டு 1300 ஆண்டுகள் ஆகின்றது ! இதை வரைந்தவன், அவன் பெயரை கூட விட்டுச் செல்லவில்லை ! ஆள் அரவமற்ற ஒரு மலையின் மீது கேட்பாரற்று கிடக்கும் இந்த ஓவியம் எப்படி வரையப்பட்டது என்பது தெரியுமா?
கோயில் சுவரின் அதாவது பாறைகளின் மீது சுண்ணம் தீட்டி, அந்த சுண்ணத்தின் ஈரம் காய்வதற்குள் இந்த ஓவியத்தை தீட்டி முடித்தாக வேண்டும் !! இதோ முடித்து விட்டான் பாருங்கள் அந்த பல்லவ ஓவியன் !!! இவ்வளவு குறிகிய நேரத்தில், இவ்வளவு நேர்த்தியாக இத்தனை நகை அலங்காரங்களோடு தீட்டி இருக்கும் இந்த ஓவியத்தை என்னவென்று கூறுவது? இந்த ஓவியத்தை நாம் அறியவேண்டுமென்றால் எவ்வளவு ஆராய வேண்டும், இப்படி கவனிப்பாரற்று கிடந்து, இவ்வளவு பழுதாகியும் எவ்வளவு பொலிவுடன் இருக்கின்றது இந்த ஓவியம், அந்த சொக்கும் கண்கள் எதை நோக்குகின்றது, அந்த புன்னகை எதை குறிக்கின்றது !? கழுத்தில் இருக்கும் நகைகள், தலையில் இருக்கும் கிரிடம், அடடா… விவரிக்க வார்த்தை இல்லையே… எவ்வளவு கைதேர்ந்த ஆட்கள் நம்மிடம் இருந்திருந்தால் இது போன்றவற்றை நாம் சாதித்திருக்க முடியும்.
இவ்வளவு பெருமைகொண்ட ஓவியம் ஏன் புகழ் பெறாமல் இருக்கிறது தெரியுமா, அவ்வோவியம் தமிழ்நாட்டில் இருப்பதால்.