52 கோடி ரூபாய்க்கு ஏலம் போன சிங்கிள் வைரம்
ஹாங்காங் நகரத்தில் நடந்த ஏலத்தில் சிறப்பு வண்ணம் கொண்ட வைரம் ஒன்று இந்திய மதிப்பில் சுமார் 52 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதால் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.
பபிள்கம் பிங்க் நிறம் கொண்ட இந்த வைரம் ஹாங்காங் நகரத்தில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. 3 புள்ளி 43 கேரட் எடை கொண்ட அந்த வைரத்தை கிறிஸ்டீஸ் ஆசியா என்ற நிறுவனம் ஏலம் விட்ட நிலையில் இந்த வைரத்தை ஏலம் எடுக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் குவிந்தனர். இந்த வைரத்தை ஏலம் எடுக்க கடும் போட்டி இருந்த நிலையில் இறுதியில் இந்த வைரத்தை மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிராங்கோயிஸ் குரியல் என்பவர் இந்திய மதிப்பில் 53 புள்ளி 23 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.
இதுபோன்ற விசித்திர வண்ணம் கொண்ட வைரத்தை தான் பார்த்ததில்லை என்று கூறிய பிராங்கோயிஸ், குறிப்பிட்ட வைரத்திற்கு இன்னும் அதிகம் விலை கொடுத்திருக்கலாம் என்று தெரிவித்தார்.