தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் இருந்து 55 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களை திருடிய ஹேக்கர்கள்

தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் இருந்து 55 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களை திருடிய ஹேக்கர்கள்

philippinesவளர்ந்து வரும் இண்டர்நெட் உலகில் நமது தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. இணையதளத்தின் மூலம் எப்பொழுது வேண்டுமானாலும் நமது ரகசிய தகவல்கள் திருடப்படலாம். இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் 55 மில்லியன் வாக்காளர்களின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தேர்தல் கமிஷனின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஊடுருவிய ஹேக்கர்கள் சுமார் 55 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களை திருடிவிட்டதாகவும் அவற்றில் வாக்காளர்களின் பாஸ்போர்ட் எண்கள் மற்றும் கைரேகைகளும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.

வாக்காளர்களின் கைரேகைகளையும் பாஸ்போர்ட் எண்களையும் தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் பிலிப்பைன்ஸ் தேர்தல் கமிஷன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply